கிளிநொச்சியை உலுக்கிய பயங்கரம்; ஊரே சோகத்தில்! (நெஞ்சை பதறவைக்கும் காணொளி)

1930shares

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பதினொரு வயது சிறுமி ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சோகம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பற்ற குறித்த கிணற்றில் நீர் அள்ளிக்கொண்டிருந்த போது தவறி வீழந்து உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்னை சாரதா வித்தியாலயத்தில் கல்வி கற்ற புவனேஸ்வரன் டிலானி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த சிறுமியின் தந்தை நிரந்தர சுகயீனம் காரணமாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதவர் என்றும், தாயின் உழைப்பிலேயே குடும்பத்தின் சீவியம் நடப்பதாகவும் உயிரிழந்த சிறுமியான டிலானி குடும்பத்தின் மூத்த பிள்ளை என்றும் கூறப்பட்டுள்ளது.

டிலானியின் இறுதிக் கிரிகைகளை கூட மேற்கொள்ள முடியாத நிலையில் குடும்ப வறுமை காணப்படுவதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.

இதையும் தவறாமல் படிங்க