இலங்கையில் இன்று நிகழ்ந்த பயங்கரம்; கீழே வீசப்பட்ட குழந்தைகள்! (அதிர்ச்சி வீடியோ)

256shares

கண்டியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து பலத்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 7 மணியளவில் கண்டி, யட்டி நுவர வீதியில் அமைந்துள்ள நிசாம் காம்ப்ளக்ஸ் என்ற கட்டிடமே இவ்வாறு தீப்பிடித்துள்ளது.

இதன்போது அக்கட்டடத்தில் மேல் மாடியில் தங்கி இருந்த குடும்ப உறுப்பினர்கள் கீழே இருந்தவர்களின் உதவியுடன் மேல் இருந்து பாய்ந்து தப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

குறித்த தீ விபத்தில் தமிழ் தங்க நகை வியாபாரம் செய்யும் குடும்பத்தினரே சிக்கியதாக சொல்லப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தற்போது தீயணைப்பு படையினர் களத்துக்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க