கிளிநொச்சியில் பரிதாபமாக உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு மேலும் ஒரு சோகம்; தமிழ் உறவுகளே உதவுங்கள்!

1057shares
Image

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த டிலானியின் இறுதிக் கிரிகைகளை கூட மேற்கொள்ள முடியாத மேலும் சோக நிலையில் குடும்ப வறுமை காணப்படுவதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.

இந்நிலையில் குறித்த குடும்பம் நல்லுள்ளங்களின் உதவியை நாடியுள்ளது.,

குறித்த செய்தி தொடர்பில் மேலும்.,

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பதினொரு வயது சிறுமி ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சோகம் நேற்று (7) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பற்ற குறித்த கிணற்றில் நீர் அள்ளிக்கொண்டிருந்த போது தவறி வீழந்து உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்னை சாரதா வித்தியாலயத்தில் கல்வி கற்ற புவனேஸ்வரன் டிலானி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த சிறுமியின் தந்தை நிரந்தர சுகயீனம் காரணமாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதவர் என்றும், தாயின் உழைப்பிலேயே குடும்பத்தின் சீவியம் நடப்பதாகவும் உயிரிழந்த சிறுமியான டிலானி குடும்பத்தின் மூத்த பிள்ளை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே டிலானியின் இறுதிக் கிரிகைகளை கூட மேற்கொள்ள முடியாத நிலையில் குடும்ப வறுமை காணப்படுவதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.

உயிரிழந்த பிள்ளையின் பேரன் சின்னையாவின் தொடர்பிலக்கம் – 0768607707,

உங்களது ஒவ்வொரு பகிர்வும் இக்குழந்தையின் மரண சடங்கிற்கு உதவும் என நினைத்து பகிருங்கள்!

இதையும் தவறாமல் படிங்க