சஜித் பிரேமதாசவுக்கு புகழாரம் சூட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்!

47shares

ஸ்ரீலங்காவை தலைமைத்தாங்குவதற்கான திறமைகளை வீடமைப்பு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச கொண்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

பாகுபாடு இன்றி தனது சேவையை முன்னெடுத்துச்செல்லும் அவருக்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அம்பாறை - திருக்கோவிலில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகத்தினை நேற்று திங்கட்கிழமை திறந்து வைத்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க