புதிய ஆளுநருக்கும் சம்பந்தனிற்குமிடையில் சிநேகபூர்வ சந்திப்பு! உடனிருந்த சுமந்திரன்!

25shares

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வடமாகாணத்திற்கான புதிய ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ஆளுநராக நேற்று நியமனக் கடிதத்தினை பெற்றுக்கொண்ட அவர் முதலாவது சிநேகபூர்வ சந்திப்பாக இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் உடனிருந்தார்.

இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க