மைத்திரிக்காக யாழில் மரம் நட்ட புதிய ஆளுநர்!

24shares

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற நான்காம் வருட பூர்த்தியை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் மரங்கள் நாட்டும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

வடமாகாணத்தின் புதிய ஆளுநராக பதவியேற்ற சுரேஷ் ராகவன் மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிலங்காவின் ஜனாதிபதியாக பதவியேற்று நேற்றுடன் நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகி ஐந்தாவது ஆண்டு ஆரம்பமாகின்றது.

மைத்திரிபால சிறிசேன கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது பொது வேட்பாளராகக் களமிறங்கி தேர்த்லில் வெற்றிபெற்றார்.

இந்நிலையில் நான்கு ஆண்டு பூர்த்தியாகும் விழா இன்றைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் வடமாகாண ஆளுநர் சுரேஸ் ராகவன் மற்றும் யாழ் மாவட்ட செயலர் ஆகியோரினால் மரங்கள் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தின் பழைய பூங்காவில் இடம்பெற்றது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட சுதந்திரக் கட்சி பிரமுகர் மற்றும் யாழ் மாவட்ட செயலக அரசாங்க உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

நேற்று முன்தினம் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் சுரேஷ் ராகவன் மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை களுகங்கை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணி நிறைவு மற்றும் மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்தினால் நீரில் முழ்கும் பழைய லக்கல நகரத்திற்கு பதிலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய லக்கல பசுமை நகரத்தை மக்களிடம் கையளிக்கும் விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க