அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வரும் பாரிய ஆபத்து!!

277shares

யுத்தத்தில் ஈடுபடும் அமெரிக்க படையினரின் மத்திய நிலையம் ஸ்ரீலங்காவில் அமைக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மௌனம் காப்பது தொடர்பில் மஹிந்தவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் மிலேனியம் நிதியம் திட்டமிட்ட சூழ்சியின் கீழேயே சிறிலங்காவிற்கு மில்லியன் கணக்கான டொலர் நிதியை வழங்குவதாகவும் அவர் சாடியுள்ளார்.

கொழும்பு பொரளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தக் கொண்ட போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் - அமெரிக்காவின் யுத்தத்தில் ஈடுபடும் கடற்படையினரின் மத்திய நிலையமொன்று சிறிலங்காவில் அமைக்கப்படுவது தொடர்பில் இதுவரையில் வெளிவந்துள்ள தகவல்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய யாரும் இதுவரையிலும் எந்தவித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.

அனைவரும் வாய்களை மூடிக் கொண்டுள்ளனர். பிரதமரோ, அல்லது ஜனாதிபதியின் கீழ் இயங்குகின்ற பாதுகாப்பு அமைச்சோ இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இது சிறிலங்காவின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நேரடியாக பாதிப்பினை ஏற்படுத்தும் நடவடிக்கையொன்றாகும்.

அதேபோல எமது சுயாதீனத்தனமைக்கும் பாதிப்பானதாகும். நாம் எமது நாட்டிலிருந்து 1956 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே பிரித்தானியாவின் இராணுவ முகாம்களை அகற்றினோம், திருமலையில் கடற்படைத் தலைமைகம் இருந்தது அதனையும் அகற்றினோம்.

அதன் பின்னர் சிறிலங்கா ஒருபோதும் வெளிநாட்டு இராணுவ முகாம்களுக்கு எந்தவொரு இடத்தினையும் வழங்கவில்லை. ஆனால் தற்போது இங்கு வருகை தந்துள்ளது மிகப் பெரியதொரு அச்சுறுத்தலாகும். நாம் இது தொடர்பில் உடனடியாக அரசாங்கம் தெளிவுபடுத்தலினை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி நிற்கின்றோம். அப்படியில்லாது இந்த அரசாங்கம் இதனை மறைத்து மறைமுகமாக மேற்கொள்ள முயற்சிக்கின்றது எனின், அது சாத்தியமற்றதாகும். என்றார்.

இதையும் தவறாமல் படிங்க