வடமராட்சி மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி!

894shares

நீண்ட நாட்களாக புனரமைப்பு செய்யப்படாதிருந்த கச்சாய்-கொடிகாமம்-பருத்தித்துறை வீதி (AB 31) காப்பற் சாலையாக தரமுயர்த்தப்படவுள்ளது.

இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் மிக விரைவில் நடைபெறவுள்ளதுடன் MAGA நிறுவனத்தினரால் இந்தப் பணிகள் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

இதன் ஆரம்பமாக நேற்றைய தினம் குறித்த வீதியில் சிறப்புப் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

மிக நீண்ட நாட்களாகவே குறித்த வீதியினைப் புனரமைத்துத் தருமாறு மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேறுவதையிட்டு குறித்த விதியால் பயணிக்கும் மக்கள் தமது மகிழ்ச்சியினை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக வடமராட்சியிலிருந்து தென்மராட்சிக்கும் தென்பகுதிகளுக்கும் பயணிப்பதற்கு சுருக்குவழிப் பாதையாக மேற்படி வீதியே காணப்படும் நிலையில், நீண்ட காலமாக குறித்த வீதி பயணிப்பதற்கு உகந்ததாக காணப்படவில்லை.

இந்த நிலையில் குறித்த வீதியினைப் புனரமைக்கவேண்டும் என்று மக்கள் பல்வேறுபட்ட கோரிக்கைகளினையும் உரிய தரப்பினருக்கு முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையிலேயே குறித்த வீதி காப்பற் சாலையாக புனரமைப்புச் செய்வதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

வலிகாம இடப் பெயர்வின்போது வடமராட்சிப் பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் இந்த வீதியூடாகவே நகர்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க