யாழில் பாரிய கொள்ளை தடயவியல் பொலிஸார் களத்தில்!

138shares

சாவகச்சேரி நகரில் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த சம்பவத்தில் ஏழு லட்சம் ரூபா பணம், மூன்று லட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசிகள், மற்றும் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் என சுமார் பத்து லட்சம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட வர்த்தக நிலையத்தின் மேற்கூரையை பிரித்து சி.சி.ரீவி கமெரா இணைப்புக்களை துண்டித்து விட்டே கொள்ளையர்கள் உள்நுழைந்துள்ளனர். இக்கொள்ளை இடம்பெற்ற போது வர்த்தக நிலையத்தின் பணியாளர்கள் கடையின் பின்புறம் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸாரோடு இணைந்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க