அரச உத்தியோகத்தர்களுக்கு புதியவருடத்தில் கிடைத்துள்ள மகிழ்ச்சி செய்தி!

226shares

அரச சேவையாளர்களின் அடிப்படை சம்பளம் இந்த மாதம் முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது இதன்படி, 2,500 ரூபாவிற்கும் பத்தாயிரம் ரூபாவிற்கும் இடையில் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழ்மட்ட அரச சேவையாளர்களின் ஆரம்ப சம்பளம் 2500 ரூபாவினாலும், உயர் அதிகாரிகளின் சம்பளம் பத்ததாயிரம் ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு அரச சேவையாளர்களுக்கு சலுகையாக பத்தாயிரம் ரூபா வழங்ப்பட்டதோடு. அந்த சலுகையை கட்டம் கட்டமாக 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சம்பளத்தில் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதன்படியே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், 2020 ஆம் ஆண்டிலும் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க