சற்றுமுன் ரணிலின் அதிரடி; தலை குனிந்த மஹிந்த!

746shares

கடந்த ஆட்சிக் குழப்பம் ஏற்பட்டிக்காவிட்டால் நாட்டின் பாரிய கடன் சுமைகளில் பெரும்பாலானவை குறைக்கப்பட்டிருக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனநாயகத்தை வென்றெடுத்தது போல பொருளாதாரத்தையும் தமது அரசாங்கம் வென்றெடுக்கும் என அவர் குறிப்பிட்டார்.

இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில் பிரதமர் ரணிலின் மேற்படி கூற்று அமைந்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்றைய தினம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில் நாட்டின் பொருளாதாரம் எந்த நேரத்திலும் பாரிய வீழ்ச்சி நிலைக்குச் செல்லலாம் என எச்சரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் இந்த அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசமைப்பு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகமாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் மேற்படி எச்சரிக்கைக்கு பதிலளிக்குமுகமாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.

கடந்த 52 நாட்கள் ஆட்சிக் குழப்பம் ஏற்பட்டிருக்காவிட்டால் நாட்டின் பெரும்பாலான கடன் சுமைகள் குறைக்கப்பட்டிருக்கும் என ரணில் கூறும்போது மஹிந்த ராஜபக்‌ஷ அமைதியாயிருந்து அவரது உரையைக் கேட்டுக்கொண்டிடுந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க