உறங்கிக்கொண்டிருந்தவர் தலையணைக்கு அடியில் பாம்பு; யாழ்ப்பாணத்தில் நடந்த அதிர்ச்சி!

135shares

யாழில் உறங்கிக்கொண்டிருந்தவரின் தலையணைக்கு அடியில் பாம்பு ஒன்று பதுங்கியிருந்த திகில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மூளாய் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

வயற் பகுதியை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட நபர் குறிப்பிடுகையில், நேற்று இரவு நுளம்பு வலையை விரித்து உறங்கச் சென்றதாகவும் நள்ளிரவு நேரம் தலையணைக்கு அடியில் ஏதோ சரசரப்பதை உணர்ந்து திடீரென்று எழுந்து அறை வெளிச்சத்தை போட்டதாகவும் தெரிவித்தார்.

இதன்போது தலையணைக்கு ஓரமாக சிறிய விஷப் பாம்பு ஒன்று நெளிந்துகொண்டிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியடைந்ததாகவும் பரபரப்போடு கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த பாம்பினால் எவ்வித தீங்கும் நேரவில்லை என்பதால் போத்தல் ஒன்றினுள் பிடித்து அருகிலுள்ள ஆலய முன்றலில் விடுவித்ததாகவும் அவர் கூறினார்.

இதையும் தவறாமல் படிங்க