யாழ்ப்பாண கிணறுகளில் தமிழ் இளைஞர்களின் சடலங்கள்! அடுத்து நடக்கப்போவது என்ன?

539shares

யாழ்ப்பாணம் மண்டைதீவில் உள்ள இரு கிணறுகளில் தமிழ் இளைஞர்களின் சடலங்கள் போடப்பட்டு மூடப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஸ்ரீதரன் எம்.பி முன்வைத்துள்ள கருத்து தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும், இக்கருத்து தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஏனைய ஆணையளர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் காணாமல் போனோர் அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், யாழ்ப்பாணம் மண்டைதீவில் இரு கிணறுகளில் 120 தமிழ் இளைஞர்களின் சடலங்கள் போடப்பட்டு, அவ்விரு கிணறுகளும் கொங்கிறீட்டினால் மூடப்பட்டுள்ளன.

உடனடியாக இக்கிணறுகள் தோண்டப்பட்டு அதற்குள் கொன்று போடப்பட்டுள்ள இளைஞர்களின் விபரங்கள் கண்டறியப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இதையும் தவறாமல் படிங்க