இன்றைய அரசிலமைப்பு எதற்கு கூடுகிறது? மஹிந்த அணி ஆவேசப் பேச்சு!

18shares

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பாதீட்டுக்குப் பெற்றுக்கொள்வதற்கேஇன்றைய தினம் அரசியல் அமைப்பு பேரவை கூடவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் பிரதமர் பதவியை தக்க வைத்து கொள்வதற்காக இந்த அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது.

இதற்கான பிரயத்தனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மேற்கொண்டுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் முன்வைக்கப்படவுள்ள பாதீட்டை வெற்றி கொள்வதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எண்ணப்படி பிரதமர் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க குற்றம் ஆவேசமாக கருத்து வெளியிட்டிருந்தார்.

இதையும் தவறாமல் படிங்க