சவேந்திர சில்வாக்கு கடும் அதிர்ச்சியாய் அமைந்த செய்தி; எந்த நேரத்திலும் கைதாகலாம்!

112shares

முக்கிய போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வா வெளிநாட்டுக்கு பயணிப்பாராயின் பயணிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக யஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வாவை இராணுவ பிரதானியாக நியமிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் அதிர்ச்சியளிக்கக்கூடிய புதிய இராணுவ பிரதானி நியமனம் குறித்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பு கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளது.

புதிய இராணுவ பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வா வெளிநாட்டுக்கு பயணிப்பாராயின், பயணிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் கைது செய்யப்படுவார் என அமைப்பின் தலைவர் யஸ்மின் சூக்கா எச்சரித்துள்ளார்.

புதிய இராணுவ பிரதானி நியமனம் குறித்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், முக்கிய போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வாவை இராணுவ பிரதானியாக நியமிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் அதிர்ச்சியளிக்கக்கூடிய இலங்கையின் அடிமட்ட செயற்பாடு என்றும் விமர்சித்துள்ளார்.

ஜனாதிபதியின் இச்செயல் போரில் பாதிக்கப்பட்ட மக்களை அவமதிப்பதோடு, நல்லிணக்க செயற்பாடுகளையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் யஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, இலங்கை இராணுவத்தின் 53ஆவது பிரதானியாக நியமிக்கப்பட்டார்.

இறுதிக்கட்டப் போரில் நிகழ்த்தப்பட்ட மோசமான போர்க்குற்றங்களுடன் இவருக்குத் தொடர்பு இருப்பதாக, தமிழ் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் என்பன தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க