சற்றுமுன்னர் ரணிலின் அதிரடி; பலத்த எதிர்பார்ப்பில் தமிழர்கள்!

418shares

சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசியலமைப்புக்கான நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் உத்தேச வரைவுத் திட்டத்தை சற்றுமுன்னர் சபையில் முன்வைத்தார்.

குறித்த வரைபுத் திட்டத்தினை சபையில் முன்வைக்கும்போது நாடு இதன்மூலம் ஒருபோதுமே பிளவுபடாது என்பதை சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இதுகுறித்த தீர்மானம் மக்கள் பிரதி நிதிகளின் கைகளில்தான் தங்கியுள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும் மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பிலுள்ள கணிசமான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் புதிய அரசியலமைப்புக்கான எதிர்ப்பினைக் கடைப்பிடித்துவருகின்றமை இங்கு குறிபிடத்தக்கது.

குறித்த உத்தேச வரைபுத் திட்டம் எவ்வாறான தீர்வினைத் தந்துவிடப்போகின்றது என்பது தொடர்பில் தமிழர் தரப்பு பலத்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றமை இங்கு சொல்லக்கூடியதாகும்.

இதையும் தவறாமல் படிங்க