விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் விதித்துள்ள கடுமையான உத்தரவு!

128shares

மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை செலுத்துமாறு நீதிமன்றம் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு உத்தரவிட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் டில்வின் சில்வாவினால் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவன்சவின் பெயரில் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட “நெத்த வெனுவட்ட எத்த” எனும் நூலினூடாக, ஜே.வி.பியின் அறிவுசார் சொத்து சட்டத்தின் கீழ் தனது உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி, மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளர் டில்வின் சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீண்ட காலமாக இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார். அறிவுசார் சொத்து சட்டத்தின் கீழ் நெத்த வெனுவட்ட எத்த புத்தகத்தின் உண்மையான உரிமை விமல் வீரவன்சவுக்கு அல்லாமல் டில்வின் சில்வாவுக்கே கிடைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க