நாடாளுமன்ற அராஜகம் தொடர்பான இறுதி அறிக்கை சபாநாயகரிடம்!

24shares

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் இறுதி அறிக்கை சபாநாயகரிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது, அமைதியின்மை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இதனை தெரிவித்தார்.

தமது குழுவின் விசாரணைகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளது.

அதற்கான யோசனையொன்றும் நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதிசபாநாயகர் தெரிவித்தார், நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14,15 மற்றும் 16 ஆம் திகதிகளில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் இதன்போது நாடாளுமன்ற சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க