ரணிலுக்கு மஹிந்த விடுத்துள்ள முக்கிய சவால்; நிறைவேற்றுவாரா?

64shares

என்ன விடயமாக இருந்தாலும் நாடாளுமன்றில் திர்மானிக்கலாம் என்றும் அதற்கு முதலில் நாடாளுமன்ற தேர்தலுக்கு செல்வோம் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சவால் விட்டுள்ளார்.

மேலும் புதிய அரசியலமைப்பை கொண்டுவர தற்போதுள்ள நாடாளுமன்றம் ஏற்புடையது அல்ல எனவும் அவர் சுட்டிக்காடியுள்ளார்.

புதிய நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றுக்குச் செல்வோம் என்றும், அதன்போது புதிய அரசியலமைப்பு தொடர்பான உங்களின் யோசனைகளை முன்வையுங்கள் என்றும் தாமும் தமது யோசனையினை முன்வைப்போம் என்றும் பிரதமருக்கு கூறிய மஹிந்த ராஜபக்‌ஷ, இரு தரப்பினதும் யோசனை தொடர்பில் மக்களே தெரிவுசெய்யட்டும் என்றும் வலியுறுத்தினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னதாக உரையாற்றிய விடயத்துக்கு மஹிந்த ராஜபக்‌ஷ மேற்படி கூறினார்.

இதேவேளை இன்றைய தினம் தனது உரையின்போது ரணில் விக்கிரமசிங்க புதிய அரசமைப்பு தொடர்பான நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் திட்ட வரைபினைச் சமர்ப்பிக்கும்போது நாடு பிளவுபடாது என்ற கருத்தினை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க