சங்கிலி தொடர் போல நிகழ்ந்த கோர விபத்து; 10 மாத குழந்தை உள்பட 9 பேர் பலி; பெரும் சோக சம்பவம்!

200shares

சங்கிலி தொடர் போல நிகழ்ந்த சாலை விபத்தில் 10 மாத குழந்தை உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் வால்டிவியா மாகாணத்தின் தலைநகர் வால்டிவியா மற்றும் மாபில் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் 10 மாத பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் இருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் ஒரு லாரி மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி எதிர் திசைக்கு சென்ற லாரி அந்த வழியாக வந்த வேன் மீது மோதியது.

இவ்வாறு அடுத்தடுத்து சங்கிலி தொடர் போல நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 10 மாத குழந்தை உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 11 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க