அர்ஜுன மஹேந்திரனை அழைத்துவர முடியாததால் வெட்கப்பட வேண்டும் - மஹிந்த அமரவீர!

6shares

நாட்டில் ஊழல் மோசடிகளை ஒழிக்க ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் கொண்டுவரும் எந்தவொரு சட்ட மூலத்திற்கும் ஆதரவளிக்க தாங்கள் தயார் என சிறிலங்காவின் பிரதான எதிர்கட்சியான மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

எந்த அரசாங்கத்தின் காலமாக இருந்தாலும், தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் தமக்கு இல்லையென, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின், பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர சிறிலங்கா நாடாளுமன்றில் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா - துருக்கி ஆட்களை மீள ஒப்படைத்தல் உடன்படிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று உரையாற்றிய எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, மத்திய வங்கி பிணைமுறி மோசடி இடம்பெற்று நான்கு வருடங்கள் ஆகியுள்ள நிலையில் அர்ஜுன மஹேந்திரனை அழைத்துவர முடியாமல் போனதையிட்டு வெட்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க