தற்போதைய அரசாங்கத்தை கடுமையாக சாடிய சுமந்திரன்!

20shares

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் மீது அந்த அரசாங்கத்தை மீண்டும் ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு முன்னின்று உழைத்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மத்தியாபரனம் ஏப்ரஹாம் சுமந்திரன் கடும் ஆத்திரம் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

சட்டத்தின் ஆட்சி தொடர்பிலும், நீதிமன்றத்தின் சுயாதீன செயற்பாடு தொடர்பிலும் பெருமிதம் வெளியிட்டுவரும் ரணில் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறி நான்கு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள போதிலும், இதுவரை கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒருவரினது விசாரணைகளைக் கூட நடத்தவோ, அதற்கான ஏற்பாடுகளையோ செய்யவில்லை என்றும் சுமந்திரன் கடுமையாக சாடியிருக்கின்றார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜனவரி பத்தாம் திகதியான வியாழக்கிழமை நடைபெற்ற விவாதமொன்றில் கலந்துகொண்டு, சர்வதேச விசாரணையொன்றின் ஊடாக மாத்திரமே போர் குற்ற விசாரணைகளை நடத்த முடியும் என்பது தொடர்பில் சிறிலங்கா நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வகுப்பெடுத்திருந்த நிலையிலேயே இந்தக் குற்றச்சாட்டுக்களையும் சுமந்திரன் முன்வைத்திருக்கின்றார்.

இதையும் தவறாமல் படிங்க