வட மாகாணம் பாலைவனாமாகுவதற்கு முன்னர் அதனை சோலைவனமாக்க அழைப்பு!

21shares

சிறிலங்காவை கடந்த 50 வருடங்களாக ஆண்ட ஆட்சியாளர்கள் எவரும் வடக்கில் எந்தவித அபிவிருத்திகளையும் மேற்கொள்ளவில்லை என்றும், அங்குள்ள வேலையில்லா பிரச்சினைகளையும் தீர்க்கவில்லை என்றும் பிரதமர் ரணில் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கின்றார்.

இதனால் முழுமையாக ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும் வட மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு தேவையான சேவைகள் அபிவிருத்தியை பெற்றுக்கொடுப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் அரசியல் சாசனசபையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க, வட மாகாணம் பாலைவனாமாகுவதற்கு முன்னர் அதனை சோலைவனமாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதிவகளை ஏற்று பணியாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க