மீண்டும் பொலிஸ்மா அதிபருக்கு வந்துள்ள நெருக்கடி!

39shares

காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர, எதிர்வரும் திங்கட்கிழமை அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டதாக நாமல் குமார வெளியிட்டுள்ள தகவல்களுக்கு அமையவே, காவல்துறைமா அதிபருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் ஆரியனந்த வெலிஅங்க தெரிவித்தார்.

காவல்துறைமா அதிபரின் குரல் மாதிரி ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக இதன்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்தாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு காவல்துறைமா அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஆரியனந்த வெலிஅங்க தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க