வடபகுதி மயானம் ஒன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட இராணுவத்தினர்!

130shares

வலி.தென்மேற்கு பிரதேசத்தில் மாதகல் முதலாம் வட்டாரத்திலுள்ள போதி மயானத்தில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் மயானத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இதையடுத்து மயானத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையில் பிரதேச சபை ஈடுபட்டுள்ளது.

குடாநாட்டில் அரச காணிகளில் முகாமிட்டிருக்கும் இராணுவத்தினர் படிப்படியாக வெளியேறி வருகின்றார்கள். இந்த நிலை வலி.தென்மேற்குப் பிரதேச சபைக்குச் சொந்தமான போதி மயானத்தில் முகாமிடு நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் கடந்தவாரம் மயானத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வலி.தென்மேற்கு பிரதேசத்தில் மாதகல் முதலாம் வட்டாரத்திலுள்ள போதிமயானக் காணியில் ஒரு பகுதியில் இராணுவத்தினர் முகாமிட்டு நிலைகொண்டிருந்தனர். பல வருடங்களாக நிலைகொண்டிருந்த இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் பிரதேச சபையைக் கோரியிருந்தன.

இந்நிலையிலேயே பிரதேசசபையினால் இராணுவத்தினரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து குறித்த மயானத்திலிருந்து படயினர் முற்றாக வெளியேறிச்சென்றுள்ளனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அப்பகுதி மக்களின் நலன் கருதி மேற்படி மயானத்தை அபிவிருத்தி செய்யுமாறு முதலாம் வட்டார உறுப்பினர் திருமதி சிவனேஸ்வரி தவிசாளரைக் கோரியதைத் தொடர்ந்து மயானம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க