ஹர்தால் வன்முறை,டயர்கள் எரிப்பு, கடை உடைப்பு, இரு இளைஞர்கள் கைது!

59shares

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஹர்த்தாலையிட்டு சில வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

வீதியில் டயர் எரித்த சம்பவம் தொடர்பாக இரு இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.மேலும் பலரை தேடிவருவதாகவும் கூறியுள்ளனர்.

அத்துடன் மட்டக்களப்பு நகரில் ஹர்தால் தினத்தில் திறந்திருந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் கடை ஒன்றும் உடைக்கப்பட்டுள்ளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநராக எம். ஹஸ்புல்லா நியமிக்கப்பட்டதை கண்டித்து கிழக்கு மக்கள் ஒன்றியம் தலைப்பில் வெள்ளிக்கிழமை பூரண ஹர்தாலுக்கு துண்டுப்பிரசுர மூலம் அழைப்பு விடுவிக்கப்பட்டு தமிழ் பிரதேசங்களில் பூரண ஹர்தால் அனுஸ்டிக்கப்பட்ட போதே குறித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

சம்பவ தினம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகாமையில் நடு வீதியில டயர் போடப்பட்டு எரிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் நாவற்குடா பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலுக்கமைய கைது செய்யப்பட்டனர்

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஸர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க