பேஸ்புக்கால் வைத்தியசாலையிலிருக்கும் பாடசாலை மாணவி; அதிபர் தாக்குதல்!

117shares

கண்டியிலுள்ள பிரபல மகளிர் பாடசாலை அதிபரின் தாக்குதலில் காயமடைந்த உயர்தர மாணவி ஒருவர் நேற்று கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்கப்பட்ட மாணவி தனது நண்பியுடன் பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அதிபர் தொடர்ந்து அந்த மாணவியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனக்கும் அந்த புகைப்படத்திற்கும் தொடர்பு இல்லை என குறித்த மாணவி கூறிய போதிலும் தவறை ஏற்றுக் கொள்ளுமாறு பலவந்தப்படுத்தி குறித்த மாணவியை அதிபர் தாக்கியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மாணவியின் தாயார் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாடு செய்த சந்தர்ப்பத்தில் மாணவியின் காதில் கடுமையான வலி உள்ளதாக குறிப்பிட்ட நிலையில் அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதிபரின் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கமரா உதவியுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க