தீ பிடித்த அமெரிக்க தூதரகம்!

53shares

காலி வீதி - கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கட்டத்தில் இன்று காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

12 பேர் உள்ளடங்கிய குழுவினர் குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும் கொழும்பு மாநகர சபை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரைக்கும் தெரியவரவில்லை. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க