பிரான்ஸில் பாரிய வெடிப்பு! தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தல்!

212shares

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள வெதுப்பகமொன்றில் சக்தி வாய்ந்த வெடிப்பு ஏற்பட்டதால் பலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட தீ பரவலால் பல கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெதுப்பகத்தில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாகவே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் குறித்த எவ்வித அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்றும் பரிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வெடிப்பு சம்பவத்தை அடுத்து தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாரிஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க