தென்பகுதியில் கொடூர கொலை! ஸ்தலத்தில் விசேட பொலிஸ் படை!

179shares

மஹரகம-பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெடிகம வீதியில் சடலம் ஒன்று இருப்பதாக பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்றிரவு 11.10 மணியளவில் சடலம் இருப்பதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இரத்மலானை பிரதேசத்தைச் ​சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலத்தின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் வெட்டுக் காயங்கள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதுடன், சடலம் காணப்பட்ட இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், விசேட பொலிஸ் படையும் வரவழைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன், பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க