கிழக்கு மாகாணத்திலும் கால்பதித்தது டென்மார்க் விபோ நகரின் அறம் அமைப்பு!

18shares

டென்மார்க் விபோ நகரின் புலம்பெயர் உறவுகளின் அறம் அமைப்பினூடாக இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட மகிளூர் முனை 110B கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட R.D.S பாலர் பாடசாலையின் 40 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மகிளூர் முனை R.D.S. பாலர் பாடசாலை மண்டலத்தில் காலை 10:00 மணிக்கு மகிளூர் முனை சக்தி இளைஞர் கழக உறுப்பினர் விதுசன் தலைமையில் ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் டென்மார்க் விபோ நகரின் அறம் அமைப்பின் பிரதிநிதியாக அறம் அமைப்பின் உறுப்பினர் இராசதுரை கோகுலன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கோப்பாய் பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ர.பகீரதன், காங்கேசன்துறைத் தொகுதி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஐ.மதுசன், அச்செழு இளைஞர் கழகத்தின் தலைவர் ஈ.துசந்தன் மற்றும் அச்செழு இளைஞர் கழக உறுப்பினர்களான ச.பகிரதன்,டெ.பகிந்தன் மகிளூர் முனை சக்தி இளைஞர் கழக உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் கு.துஷாந்தன், மகிளூர் முனை R.D.S நிர்வாக உறுப்பினர்கள், R.D.S. பாலர் பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், சமூக நலன் விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க