மனோ கணேசனுடன் 65 கோடி ரூபாவிற்கு பேரம் பேசியதாக குற்றம்சாட்டு!

22shares

சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் இணைந்து ஒக்டோபர் 26 ஆம் திகதி மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக இடம்பெற்ற பேரம் பேசல்களின் போது, தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசனுடன் 65 கோடி ரூபாவிற்கு பேரம் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏ.சஜீவானந்தன் என்பவர் அதனை தானே மேற்கொண்டதாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

எனினும் தான் அமைச்சர் மனோ கணேசனுடன் விளையாட்டாகவே 65 கோடி ரூபாய்க்கான பேரத்தை பேசியதாக ஜனநாயக முற்போக்கு முன்னணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதனின் விசுவாசியான ஏ.சஜீவானந்தன்நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி தெரிவித்திருக்கின்றார்.

இதையும் தவறாமல் படிங்க