ஸ்ரீலங்காவில் நல்லிணக்கம் என்பது வெறும் பேச்சளவில் மாத்திரமே உள்ளது!

12shares

ஸ்ரீலங்காவில் நல்லிணக்கம் என்பது வெறும் பேச்சளவில் மாத்திரமே உள்ளதாக மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தை செயன்முறை ரீதியாக எடுத்துக்காட்டிய தலைவர்கள் ஸ்ரீலங்காவில் இல்லை எனவும் ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் கருத்து வெளியிட்ட போது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

கண்டியிலுள்ள மத்திய மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு வருகைதந்த மைத்திரி குணரத்னவை ஆளுநர் அலுவலக அதிகாரிகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.

இதனையடுத்து தேசிய கொடியை ஆளுநரும் மத்திய மாகாண கொடியை ஆளுநரின் செயலாளரும் ஏற்றிவைத்ததை தொடர்ந்து பொலிஸ் அணிவகுப்பு மரியாதையும் ஆளுநருக்கு வழங்கப்பட்டது.

ஆளுநருக்கு பௌத்த பிக்குகளின் பிரித் ஓதி ஆசிர்வாதம் வழங்கியதை தொடர்ந்து, மத்திய மாகாண ஆளுநருக்கான கடமைகளை மைத்திரி குணரத்ன பொறுப்பேற்றார்.

இதையும் தவறாமல் படிங்க