முஸ்லிம் சமூகத்தவர்கள் ஏனைய மதத்தவர்களுடனும் நல்ல உறவைப் பேணிக்கொள்ள வேண்டும்

25shares

முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் ஏனைய மதத்தவர்களுடனும் இனத்தவர்களுடனும் நல்ல உறவைப் பேணிக்கொள்ள வேண்டும் என இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.

மற்றைய இனத்தவருடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போது நேர்மையுடன் நடந்துக்கொள்ளவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக மன்னாரில் இருந்து இடம் பெயர்ந்து மீள் குடியேறாத சுமார்120 முஸ்ஸிம் குடும்பங்களுக்கான புதிய வீட்டுத் திட்டம் நேற்று மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி இரண்டாம் கட்டை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த வீட்டுத்திட்ட வீடுகள் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இதையும் தவறாமல் படிங்க