மக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சிறிலங்கா இராணுவத்தினர்!

19shares

சிறிலங்காவில் தொடர்ந்தும் மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கான உரிமையை சிறிலங்கா இராணுவத்தினர் உள்ளிட்ட அரச படையினர் கட்டுப்படுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ள முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளரான ருக்கி பெர்ணாண்டோ, இவ்வாறான விடயங்களை சவாலுக்கு உட்படுத்துவது முக்கியமானது என வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா பாதுகாப்பு தரப்பினர் இந்த செயற்பாடுகள் நாட்டின் சாதாரண சட்டத்திற்கும் அரசியல் சாசனத்திற்கும் விரோதமானது என்றும் மனித உரிமை செயற்பாட்டாளரான ருக்கி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படையினர் பலவந்தமாக கையகப்படுத்தி வைத்திருந்த கிளிநொச்சி இரணைதீவில் பலவந்தமாக குடியேறிய மக்களின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அங்கு செல்ல முயற்சித்த மனித உரிமை செயற்பாட்டாளரான ருக்கி பெர்ணாண்டோ அவரது நண்பர் மற்றும் பி.பி.சி ஊடகவியலாளர்களை ஸ்ரீலங்கா கடற்படையினர் இடைமறித்துள்ளனர்.

இரணைமாத நகரில் வைத்து படகில் ஏறுவதற்கு முற்பட்ட போது ஸ்ரீலங்கா கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள் தமது பயணத்திற்கு தடை ஏற்படுத்தியதாக ருக்கி பெர்ணாண்டோ ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க