அமைச்சர் பிறந்த நாளும் அடிக்கல் நாட்டும் வைபவமும்!

14shares

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ அவர்களின் பிறந்தநாளான நேற்று (12) மன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு கிராமத்தில் 25 வீடுகளுக்கும் நானாட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட அருவிமோட்டை கிராமத்தில்15 வீடுகளுக்கும் அடிக்கல் நடப்பட்டது.

இந்த வீடுகள் ஒவ்வொன்றும் ஏழரை லட்சம் பெறுமதியானவை. இதனை தொடர்ந்து அமைச்சருக்காக மடுக்கோவிலில் விஷேட ஆராதனை நடைபெற்றதுடன் வீடமைப்பு அதிகார சபை மன்னார் அலுவலகத்தில் பத்து ஏழை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டடுள்ளது.

மன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு கிராமத்தின் வீடுகளுக்கான அடிக்கல்லினை வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் மற்றும் நிர்வாகிகளும் அருவிமோட்டை கிராமத்தில் அமைக்கப்படும் வீடுகளுக்கான அடிக்கல்லினை நானாட்டான் பிரதேச செயலாளர் மா.சிறிஸ்கந்தகுமார் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஜொனி வீடமைப்பு அதிகாரசபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் சந்தான் அருவிமோட்டை கிராம சேவையாளர் அந்தோணிப்பிள்ளை மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் நட்டுவித்தனர்.

அதன்போது நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஜொனி அவர்களால் பயனாளிகளுக்கு மாமரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதையும் தவறாமல் படிங்க