நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கில் திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு!

26shares

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்டபகுதியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த மோட்டார் சைக்கில் ஒன்று திடீர் என தீபற்றியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 11.01.2019 வெள்ளிக்கிழமை இரவு 08.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தோட்டபகுதி ஒன்றில் நிறுத்திவைக்கபட்ட மோட்டார் சைக்கில் திடீரென தீ பற்றியதால் பிரதேச மக்கள் ஒன்றினைந்து தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தளள்தாகவும் சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸாருக்கு அறிவிக்கபட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்க்கு வருகை தந்த பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இந்த மோட்டார் சைக்கிலுக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைக்கபட்டதா அல்லது மோட்டார் சைக்கிலில் ஏற்பட்ட கோளாறு காரனமாக தீ பற்றியுள்ளதா என விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் ஆரம்பித்துள்ளதோடு குறித்த மோட்டார் சைக்கில் ஜந்து இலட்ச்சம் பெறுமதியினை கொண்டது எனவும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

இதையும் தவறாமல் படிங்க