வடக்கு கிழக்கு மாகாணங்களின் பாடசாலைகள் தொடர்பில் மகிழ்ச்சித் தகவல்!

140shares

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகங்கள் அறிவித்துள்ளன.

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், கிழக்குமாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

தமிழர் திரு நாளாம் தைப்பொங்கல் பெருவிழா எதிர்வரும் செவ்வாய்க்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முந்திய தினம் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இதற்கு மாற்றீடாக வார இறுதி நாளொன்றில் பாடசாலையை நடத்துவது தொடர்பில் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க