அனைத்து மக்களுக்கும் அவசர எச்சரிக்கை; இப்படி தெரிகிறதா?

149shares

செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களில் பரவக் கூடிய ஒருவகை நோய் முதன்முதலாக இலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் தென்னாபிரிக்க நாடுகளில் பரவலாக இருப்பதாகவும் இது மனிதர்களுக்கும் தொற்றக்கூடியது எனவும் பேராதனை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நோய் பாரதூரமானது அல்ல எனக் கூறப்பட்டாலும் எனினும் இதன்மூலம் தோலில் பாதிப்பு ஏற்படக் கூடுமென பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் அசோக்க தங்கொல்ல தெரிவித்தார்.

இதேவேளை கண் நோயால் பாதிக்கப்பட்ட செல்லப் பிராணி ஒன்று பேராதனை கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

அந்த செல்லப் பிராணியை சோதித்த போது அதற்கு ட்ரை-பெனசோமா (Trypanosoma) என்ற நோய் ஏற்பட்டிருந்தமை தெரிய வந்ததாக பேராசிரியர் தங்கொல்ல குறிப்பிட்டார்.

இந்த நிலையில் வீட்டிலுள்ள நாய்களுக்கு கண்ணில் மாற்றம் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க