நாட்டை பிரிக்கும் புதிய அரசியல் யாப்பொன்று உருவாக்கப்படுமாயின் நாட்டில் மீண்டுமொரு யுத்தம் வெடிக்குமாம்!

96shares

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நாட்டை பிரிக்கும் புதிய அரசியல் யாப்பொன்று உருவாக்கப்படுமாயின் அது நாட்டில் மீண்டுமொரு யுத்தம் வெடிக்கும் என்று மஹிந்தவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எச்சரித்துள்ளார்.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர், மஹிந்த ராஜபக்ச கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பிரதமராக பதவியேற்றிருக்காவிடின், ரணில் விக்ரமசிங்க தனக்கிருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி சமஷ்டி யாப்பை நடைமுறைப்படுத்தியிருப்பார் என்றும் கொழும்பிலுள்ள பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ரோஹித அபேகுணவர்தன குற்றம்சாட்டியுள்ளார்.

ரோஹித அபேகுணவர்தன – “ஐக்கிய தேசியக் கட்சி யாப்பு ஒன்றை உருவாக்கியேத் தீரும் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியாக வேண்டுமெனவும் அவர் கூறுகின்றார். யாப்பு ஒன்றை உருவாக்குவதே சர்வதேசத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதி. அந்த யாப்பில் சமஷ்டி அம்சம் உள்ளடக்கப்பட்டுள்ளது. சமஷ்டி தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை என சம்பந்தன் தெரிவிக்கின்றார். அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் சமஷ்டி காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது ஸ்ரீலங்கா என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. இதுவொரு சிறிய நாடு. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இணைந்து வாழும் நாடு இது. பிரிந்துசென்று வாழும் மக்களுடன் இந்த நாட்டு மக்களை ஒப்பிட வேண்டாமென வலியுறுத்த விரும்புகின்றோம். இவ்வாறு கருத்துக்களைக் கூறி, இனவாதத்தை தூண்டி தனியாக வாழ்வதற்கான உரிமையை பெற்றுக்கொள்வதே சுமந்திரனின் நோக்கம். வடக்கு கிழக்கை இணைக்க வேண்டுமென சுமந்திரன் கூறுகின்றார்.

தெற்கிலும் அவ்வாறு கூறினால் என்ன நடக்கும்? பிரிந்து செல்வதற்கும், தனியாக இருப்பதற்கும் அவர் கற்றுக்கொடுக்கின்றார். மீண்டும் யுத்தமொன்று ஏற்படுவதற்கான வாய்ப்பினையே அது ஏற்படுத்தும். நாட்டை பிரிக்கும் இந்த யாப்பு எப்போதோ நிறைவேற்றப்பட்டிருக்கும். எனினும் அதனை மஹிந்த ராஜபக்ச தடுத்து நிறுத்தினார். மஹிந்த பிரதமர் பதவியில் இருந்திராவிடின், தனக்கு இருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி ரணில் விக்ரமசிங்க யாப்பினை நிறைவேற்றியிருப்பார். ரணில் முன்வைத்த முன்மொழிவுகள் அல்ல உள்ளடக்கம், மூன்றில் இரண்டு பெரும்பான்மை தற்போது இல்லாத காரணத்தால் அவர் யாப்பு வரைபினை முன்வைக்கவில்லை”.

நாட்டை பிளவடையச் செய்யும் இந்த யாப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கும் எவ்வித பிரேயோசனமும் இல்லையெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன வலியுறுத்தினார்.

“இந்த யாப்பினை நிறைவேற்ற நாம் இடமளிக்கப்போவது இல்லை என்பதை அலரசாங்கத்திற்கு வலியுறுத்த விரும்புகின்றோம். இதுவொரு சமஷ்டி யாப்பு, நாட்டை பிரிக்கும் இந்த யாப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கும் எதுவும் கிடைக்கப்போவது இல்லை. சிங்கள, தமிழ் மக்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கவே இந்த யாப்பினை உருவாக்க அவர்கள் முயற்சிக்கின்றார்கள்”.

கடந்த நான்கு வருடங்களாக, தற்போதைய அரசாங்கம் பெற்றுக்கொண்ட வர்த்தக கடன்கள் ஊடாக முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்கள் எவையென முடிந்தால் தெளிவுபடுத்தமாறும் ரோஹித அபேகுணவர்தன பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சவால் விடுத்தார்.

ரோஹித போகொல்லாகம –“அரசாங்கம் ஒன்று வர்த்தக கடனைப் பெற்றுக்கொண்டால் அதற்கான சரியான செயற்றிட்டங்கள் அவசியம். எனினும் கடந்த காலங்களில் அரசாங்கம் பெற்றுக்கொண்ட வர்த்தகக் கடன்கள் ஊடாக வேறு பணிகளை மேற்கொண்டாக மத்திய வங்கியின் ஆளுநரே தெரிவிக்கின்றர்ர. மஹிந்த ராஜபக்ச கடன் பெற்றதாக குற்றஞ்சாட்டினார்கள். நாங்கள் அதிவேக வீதியை அமைத்தோம், துறைமுகத்தை அமைத்தோம், விமான நிலையத்தை அமைத்தோம். அவைகள் இன்று நாட்டின் சொத்துகள், அவைககளினூடாக நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பு கிடைக்கின்றது. எனினும் கடந்த நான்கு வருடங்களில் நீங்கள் பெற்றுக்கொண்ட வர்த்தக கடன்கள் ஊடாக மேற்கொண்ட அபிவிருத்திப் பணிகள் எவை? இதற்கு பதிலளிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமும், மங்கள சமரவீரவிடமும் கேட்கின்றோம். எங்களுக்குத் தெரியாமல் நீங்கள் ஏதேனும் பணிகளை மேற்கொண்டுள்ளீர்களா? எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் சவால் விடுக்கின்றோம். முடிந்தால் பதிலளியுங்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க