வவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதற்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஆளுகைக்குட்பட்ட நகரசபையுடன் கலந்துரையாடல்.
வவுனியா இலுப்பையடி பகுதியிலுள்ள யாத்திரிகை விடுதியினை பௌத்த தேரர்கள் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுநேற்று காலை தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஆளுமைக்குட்பட்ட வவுனியா நகரசபை தலைவர் தலைமையில் நகரசபையில் 9 பௌத்த தேரர்கள் மற்றும் 4 பொது மக்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த யாத்திரிகைக்குரிய ஆவணங்கள் பெற்றுக்கொள்வதில் பல்வேறு நிலைகள் காணப்பட்டுள்ளதுடன் காணியை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எவையும் யாத்திரிகையை உரிமை கோரியவர்களிடம் இருக்கவில்லை. எனினும் ஆவணங்களை கொண்டுவரும் பட்சத்தில் அது குறித்து சபையின் தீர்மானிப்பதாக பௌத்த தேரர்களிடம் நகரசபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.