இலங்கையில் வெளிநாட்டுப் பெண்கள் இருவர் செய்த மோசமான செயல்!

37shares

ஹெரோயின் மற்றும் என்சி என்ற போதை பொருளுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் இருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பில் தெரியவருவதாவது,

ஜேர்மன் நாட்டில் இருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்த இரண்டு பெண்களும் வாடகைக்கு கார் ஒன்றினை பெற்று நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்துள்ளனர்.

இதன்போது ஹட்டன் மல்லியப்பு சந்தியில் வைத்து குறித்த காரினை இடைமறித்து பரிசோதனை செய்த பொலிஸார், அந்த இருவரும் போதைப்பொருளுடன் செல்வதை கண்டுபிடித்தனர்.

கைது செய்யபட்ட இரண்டு பெண்கள் மீதும் ஹட்டன் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு இன்று செவ்வாய்கிழமை குறித்த இரண்டு பெண்களையும் அட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க