அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய நாளுக்காக திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் கிழக்கு கடற்பரப்புகளில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.