காலையில் இடம்பெற்ற கொடூரம்; மனைவியை சரமாரியாக குத்திக் கொலைசெய்த கணவன்!

358shares

திருகோணமலை கந்தளாய் பகுதியில் கணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகிய இரண்டு பிள்ளைகளின் தாயொருவருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் கந்தளாய் பொலிஸ் பிரிவில் உள்ள வெலிங்டன் வீதியில் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் பௌசி தஸ்மியா என்கின்ற 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளதாகவும் குடும்ப பிரச்சினைகள் காரணமாக இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

இன்று காலை ஆறு மணியளவில் சந்தேக நபரான 35 வயதுடைய சுபியான் இன்ஸான் என்பவர் தனது வீட்டிலிருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு வேலைக்குசெல்ல தயாரானபோது மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.

கழுத்திலும் வயிற்றிலும் கத்திக் குத்துக்கு இலக்கான மனைவி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்காக சென்றபோது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சந்தேக நபரான கணவன் தலைமரைவாகியுள்ளதாகவும், அவருக்கு எதிரான வழக்கு கந்தளாய் நீதிமன்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தலைமறைவாகியுள்ள சந்தேகியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதோடு, சம்பவம்தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க