மன்னார் பாலத்தில் திடீரென பெருகிய கழுதைகள்!

109shares

மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் திடீரென அதிகரித்து காணப்படுவதினால் வாகனங்களில் பயணிப்பவர்கள் பல்வேறு பலத்த அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து எமது மன்னார் செய்தியாளர் கூறியுள்ளதன்படி,

மன்னார் பிரதான பாலத்தில் இரவு, பகல் பாராது கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. தனியாக அல்லது கூட்டமாக கழுதைகள் நடமாடித்திரிகின்றன.

இதனால் உந்துருளி மற்றும் ஏனைய வாகனங்களில் மன்னார் நகருக்கு வருபவர்களும், மன்னார் நகரிலிருந்து பிரதான பாலத்தினூடாக வேறு இடங்களுக்கு செல்பவர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதோடு, விபத்துகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதான பாலத்தில் சுற்றித்திரிகின்ற கழுதைகளைப் பிடித்து வேறு இடங்களில் விட உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே வேளை மன்னார் நகர் பகுதியில் மக்களுக்கு இடையூறாக, விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் நடமாடிய சுமார் 70 இற்கும் மேற்பட்ட கழுதைகள் ஏற்கனவே மன்னார் நகர சபையினால் பிடிக்கப்பட்டு மாற்று இடம் ஒன்றிற்கு கொண்டு சென்று விடப்பட்டுள்ளன.

இதனால் மன்னார் நகர் பகுதியில் கழுதைகளின் பிரச்சினைகள் குறைவடைந்துள்ளதுடன் பாலத்தடியில் கழுதைகளின் மேற்படி தொல்லைகள் அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க