இலங்கையில் முச்சக்கரவண்டிகள் தொடர்பில் வெளியான தகவல்!

46shares

இலங்கையில் முச்சக்கர வண்டிகளுக்கான தனியான அதிகார சபை ஒன்றை நிறுவுவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய மன்றம் தேசிய அதிகார சபையாக மாற்றப்படவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ராகம நகரின் முச்சக்கர வண்டி ஒழுங்குறுத்தல் வலயமாக பிரகடனம் செய்யும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார்.

நகரில் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களாக பணியாற்றியவர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கும் நிகழ்வும் அங்கு இடம்பெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இதனடிப்படையில் இனிவரும் காலங்களில் முச்சக்கரவண்டிகள் தொடர்பான முறையான அவதானங்கள் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க