விடுதலையாகப்போகிறாரா ஞானசார? திரை மறைவில் சூழ்ச்சி??

40shares

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தாய் நாட்டிக்கான இராணுவம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்குறித்த அமைப்பின் ஏற்பாட்டாளர் அஜித் பிரசன்ன கலந்து கொண்டு உரையாற்றும் போது கூறியதாவது,

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு ஆளுநர் அசாத் சாலி தலையிடுவது மிகவும் சந்தேகத்திற்குரிய விடயமாக உள்ளதென அதன் ஏற்பாட்டாளர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏதாவது ஒரு வகையில் ஞானசார தேரருக்கு விடுதலை வழங்கினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்சவுக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளை இல்லாமல் செய்வதற்கு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் ஞானசார தேரரை விடுதலை செய்யும் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் இறங்கிய ட்ரம்ப்! எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

களத்தில் இறங்கிய ட்ரம்ப்! எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்