கொழும்பில் சற்றுமுன் இடம்பெற்ற திடீர் நடவடிக்கை!

228shares

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் 90 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு அமெரிக்க நாட்டவர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானியர் ஒருவர் உள்ளிட்ட ஐவர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகிகளிடமிருந்து கைப்பற்பட்ட 90 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் 1080 மில்லியன் ரூபா பெறுமதியானது என கணிப்பிடப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட திடீர் நடவடிக்கையின்பின்னரே இந்த கைது நடந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

கைதாகிய சந்தேகிகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருப்பதுடன் இதுதொடர்பான தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

இதையும் தவறாமல் படிங்க