இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணிகளை நேரில் பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

527shares

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் ஒருதொகை காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் காணிகளுக்குச் சொந்தமான மக்கள் ஆர்வத்துடன் தமது வீடுகளை பார்த்துவருகின்றனர்.

தசாப்தங்கள் கடந்து மக்கள் தமது சொந்த வீடுகளைக் கண்டு ஆனந்தக் கண்ணீருடன் மிகுந்த மகிழ்ச்சியினை வெளிப்படுத்திவருகின்றனர் என்று எமது பிரதேச செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட 45 ஏக்கர் காணிகளின் அடிப்படையில், தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணியும், ஒட்டகப்புலத்தில் 15 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டன.

மேலும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் அதி உயர் பாதுகாப்பு வலய பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த குறித்த பகுதிகளிலுள்ள கணிசமான வீடுகள் நல்ல நிலையில் உள்ளதாகவும் சில வீடுகள் திருத்தி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளே நீண்டகாலப் பாவனை இருந்துவந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் நேரில் கண்டவர்களால் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, வீடுகளில் போர் குறித்த புடைப்புச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிங்கள மன்னர்கால போர் நிகழ்வுகளும் தற்போதைய சிறிலங்கா இராணுவத்தின் துப்பாக்கி முனைப் போர் நிகழ்வுகளும், பௌத்த மத அடையாளங்களும் புடைப்புச் சிற்பங்களாக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் மக்கள் காணி ஒன்றினுள் அமைக்கப்பட்டுள்ள பௌத்த வணக்கஸ்தலம் குறித்து மக்கள் மத்தியில் ஒருவித அதிர்ச்சி அலை தென்பட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இராணுவத்தினரின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டிருந்த குறித்த வணக்கஸ்தலத்தினுள் புத்தர் சிலை ஒன்று வைத்து வழிபடப்பட்டு வந்ததாகவும், காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை குறித்த இடத்திற்கு வந்த இராணுவத்தினர் அந்த புத்தர் சிலையினை எடுத்துச் சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் வணக்கஸ்தலத்தின்பின்னால் இரண்டு பழைய புத்தர் சிலைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பௌத்த பௌத்த வணக்கஸ்தலத்தினை அடிப்படையாக வைத்து தொல்பொருள் திணைக்களத்தினர் அந்த பகுதியை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்திவிடுவார்களோ என்றும், பௌத்த மதகுருக்கள் யாரேனும் அதனை நிரந்தரமான விகாரையாக மாற்ற முற்பட்டுவிடுவார்களோ என்றும் தாம் அச்சப்படுவதாக பொதுமக்கள் சிலர் கூறியுள்ளனர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன...

இதையும் தவறாமல் படிங்க