நாடாளுன்றில் மஹிந்தவின் புதிய பிரவேசம்! கை தட்டி ஆரவாரப்பட்ட உறுப்பினர்கள்!!

  • Shan
  • January 22, 2019
51shares

சிறிலங்கா நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ இன்றைய தினம் எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்திலேயே மஹிந்த இன்று கடமையேற்றார்.

எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகரால் அறிவிக்கப்படதன் பின்னர் நாடாளுமன்ற மூன்றாம் மாடியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் மஹிந்தவின் முதலாவது புதிய பிரவேசமாக இந்த கடமையேற்பு இடம்பெற்றுள்ளது.

அமைச்சர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி போன்ற படிப்படியான பதவி நிலைகளை வகித்திருந்த மஹிந்த, இந்தமுறைதான் முதன்முதலாக எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை பெற்றார். கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தின்போது மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் ஒருதொகுதியினர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியினைக் கோரியபோதும் அந்த கோரிக்கை மறுக்கப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா சம்மந்தனுக்கு வழங்கப்பட்டமை தெரிந்ததே.

இதனடிப்படையில் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியுடன் சிறிலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்குடனான தேசிய அரசாங்கம் அமையப்பெறாததால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட்டுள்லமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய மஹிந்த ராஜபக்‌ஷ, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தை தான் தொடர்ந்து பாவிக்கப்போவதில்லை என்று கூறினார். இதன்போது அவருக்கு அருகிலிருந்த உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் மிக விரைவில் தேர்தல் ஒன்றை எதிர்கொண்டு தாம் ஆளுங்கட்சியாக பரிணமிக்க இருப்பதாக மஹிந்த சூசகமுரைத்திருப்பதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க